சீன-அமெரிக்க வர்த்தகம் குறைவு

இன்று நடைபெற்ற சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலக செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாண்டு முற்பாதியில் சீன-அமெரிக்க வர்த்தகத்தின் நிலைமையை சீன சுங்க துறை தலைமை பணியகத்தின் துணை தலைவர் வாங் லிங்ச்சுன் அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறுகையில்,

இவ்வாண்டு முற்பாதியில், சீன-அமெரிக்க வர்த்தக தொகை 2 இலட்சத்து 8 ஆயிரம் கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.3 விழுக்காடு குறைவு.

அண்மையில், அமெரிக்காவுடன் ஜெனிவாவிலும் லண்டனிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்துள்ளன. சீன-அமெரிக்க வர்த்தகம் மீட்சிடைந்துள்ளது. இப்போது இரு தரப்புகளும் லண்டன் கட்டுக்கோப்பின் தொடர்புடைய சாதனைகளை நடைமுறைப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author