சர்வதேச அளவில் பணமோசடி, பயங்கரவாத நிதி உதவி மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் முதன்மை அமைப்பான எஃப்ஏடிஎஃப் (Financial Action Task Force) அமைப்பில் இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
பாரிஸில் அண்மையில் நடைபெற்ற எஃப்ஏடிஎஃப் அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், இந்தியாவின் மூத்த அதிகாரியான விவேக் அகர்வால் இந்த உலகளாவிய அமைப்பின் துணைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எஃப்ஏடிஎஃப் அமைப்பின் வரலாற்றிலேயே இந்தியா இந்த உயர் பதவியைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
எஃப்ஏடிஎஃப் அமைப்பின் துணைத் தலைவராக முதல்முறையாக இந்தியர் ஒருவர் தேர்வு; யார் இந்த விவேக் அகர்வால்?
