டெல்லியை உலுக்கிய வரலாறு காணாத பெருமழை

Estimated read time 1 min read

டெல்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தாலும், மறுபுறம் தலைநகர மக்களுக்கு ஒரு அரிய நற்செய்தியும் கிடைத்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு(AQI) 48 ஆகக் குறைந்துள்ளது; இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகத் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான காற்று என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே மோசமான காற்று மாசினால் அவதிப்படும் டெல்லி மக்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல காற்றைச் சுவாசித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2023 செப்டம்பர் 10 அன்றுதான் டெல்லியில் AQI 45 ஆக பதிவாகியிருந்தது.
மழையுடன் கூடிய பலத்த காற்றினால் காற்றில் இருந்த மாசுத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டதே இதற்குக் காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

You May Also Like

More From Author