இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை மையம் வார்னிங்  

Estimated read time 1 min read

வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் கோவை, சேலம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (மே 26) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் மே 31-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியகிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதே இந்தத் திடீர் மழை மாற்றத்திற்குக் காரணமாகும்.

You May Also Like

More From Author