2025ஆம் ஆண்டு, எங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ஆண்டு ஆகும். நேபாள-சீன உறவின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் படைக்கும் என்று நேபாள தலைமை அமைச்சர் கே.பி. சர்மா ஒலி சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில், சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்த போது, சீனா மற்றும் நேபாளம் இடையேயான தூதரக உறவின் 70ஆவது ஆண்டு நிறைவு குறித்து இவ்வாறு கூறினார்.
இந்த சிறப்பு நேர்காணலில், சர்மா ஒலி கூறுகையில்,
இது, எங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ஆகும். மேலும் நெருங்கிய உயர்மட்ட தொடர்பு மேற்கொண்டு, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஒன்றுக்கு ஒன்று உதவி மற்றும் நம்பிக்கை தரும் கூட்டாளியுறவை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம். பல விதமாக இந்த முக்கிய காலக்கட்டத்தைக் கொண்டாடுவோம். பல்வகை நிகழ்ச்சிகள் மற்றும் பரிமாற்ற திட்டங்களை ஏற்பாடு செய்து, அரசுசார் மற்றும் அரசு சாரா ஒத்துழைப்புகளை ஊக்குவிப்போம் என்று தெரிவித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் ‘நேபாள சுற்றுலா ஆண்டு’ என நிகழ்ச்சி நடைபெறுவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த முக்கியமான நிகழ்ச்சி, நேபாளத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றும். அடுத்த ஆண்டு, முன்னேற்றம் வாய்ந்த மைல் கல் ஆண்டாக மாறும். நேபாள-சீன உறவின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் படைக்கும் என்று சர்மா ஒலி நம்பிக்கை தெரிவித்தார்.