பொங் லியுவான் செர்பிய அரசுத் தலைவரின் மனைவியுடன் பெய்ஜிங் நடன கல்லூரியில் பார்வையிடுதல்

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங் லியுவானும், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள செர்பிய அரசுத் தலைவர் வுச்சிசின் மனைவி தாமாராவும் மே 25ஆம் நாள் மாலை பெய்ஜிங் நடனக் கல்லூரியில் பார்வையிட்டனர்.

இருவரும் சீன நடனக் கலையின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்து அறிந்து கொண்டு சீன நடனம், பாலே உள்ளிட்ட நடனங்களின் கல்வி நிலைமையைப் பார்வையிட்டு கல்லூரியின் ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் உரையாடினர்.

அப்போது, பொங் லியுவான் கூறுகையில், நடன கலை என்பது எல்லையை கடந்து பண்பாடு மற்றும் சிந்தனைகளைப் பரப்புரை செய்ய முடியும் இரு நாட்டு கலைஞர்கள் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுபடுத்தி மேலதிக சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டுமென விரும்புவதாகத் தெரிவித்தார்.

இரு நாட்டுப் பண்பாடு மற்றும் கலைத் துறையிலுள்ள  பரிமாற்றத்தை வலுப்படுத்தி செர்பிய-சீன நட்புக்குப் பங்காற்ற விரும்புவதாக தாமாரா கூறினார்.

You May Also Like

More From Author