தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிக்கையில் கூறியுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவு மழை பதிவான மாவட்டமாக மதுரை அமைந்துள்ளது.
மதுரை நகரில் 13 செ.மீ. மழை பதிவாக, அதனை தொடர்ந்து மதுரை தல்லாகுளம் மற்றும் கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் கரூரின் கடவூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
