ஜூன் மாதம் முதல் இந்தியாவைத் தாக்கப் போகும் ‘எல் நினோ’.. வானிலை மையம் கொடுத்த அதிர்ச்சி அப்டேட்!  

Estimated read time 0 min read

இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எல் நினோ காலநிலையின் தாக்கம் இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பருவமழையின் அளவு மிகக் மிகக் குறைவாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம் தனது பருவமழை முன்னறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அதிர்ச்சிகரமான தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் அவ்வப்போது ஏற்படும் இந்தத் தற்காலிக வெப்பமயமாதல் நிகழ்வு, ஒட்டுமொத்த ஆசியாவின் வானிலை அமைப்பையே தலைகீழாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது.

You May Also Like

More From Author