போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டத்தின் செய்தியாளர் கூட்டம் மார்ச் 25ஆம் நாள் நடைபெற்றது. இதில் இவ்வாண்டின் கூட்டத்தின் தகவல்கள் குறித்து இம்மன்றத்தின் தலைமைச் செயலாளர் சாங்சூன் அறிமுகப்படுத்தினார்.
முன்னேற்ற வளர்ச்சிப் போக்கை ஆய்வு செய்தல், அதிகரிப்பை விரைவுபடுத்துதல், எதிர்காலத்தைக் கட்டியமைத்தல், உந்து ஆற்றலை வளர்த்தல் உள்ளிட்ட 4 கருப்பொருட்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
தவிரவும், ஆசிய பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் மற்றும் ஒருமைப்பாட்டு முன்னேற்றம் பற்றிய 2025 ஆண்டு அறிக்கையும், காலநிலை மாற்றத்தைச் சமாளித்து, பசுமையான வளர்ச்சியை ஆசியா விரைவுபடுத்துவதற்கான 2025ஆண்டு அறிக்கையும் இதில் வெளியிடப்பட்டன.
