ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு

Estimated read time 1 min read

ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாடான ஷாங்ரி-லா டயலாக் நிகழ்வில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் இந்தியாவின் ராணுவ பலம் மற்றும் அதன் நவீனமயமாக்கல் முயற்சிகளைப் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து ஊடகத்துக்கு பேட்டியளித்த பீட் ஹெக்சேத், இந்தியா மிகவும் சக்திவாய்ந்த ஒரு நாடு எனவும், அது தனது ஆயுதப் படைகளைத் தொடர்ந்து நவீனமயமாக்கி வருகிறது எனவும் தெரிவித்தார். தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்க விரிவாக்கத்தைத் தடுத்து, பிராந்திய சமநிலையைப் பேணுவதில் இந்தியா ஒரு முதன்மையான காரணியாக மாறியுள்ளது என்று அமெரிக்கா கருதுவதாகவும் அவர் கூறினார். மேலும், மிகப்பெரிய தொழில்துறை மற்றும் பொருட்கள் பரிமாற்ற கட்டமைப்பு திறனை இந்தியா உருவாக்கி வருவதாகவும் பீட் ஹெக்சேத் தெரிவித்தார்.

You May Also Like

More From Author