பிலிப்பைன்ஸ் கடல் காவற்துறையைச் சேர்ந்த 9701 என்ற கப்பல், அண்மையில் சீனாவின் ஹுவாங் யன் தீவின் கடல் பரப்புக்குச் சென்று, பல முறை உயர் வேகத்துடன் சீன கடல் காவற்துறையின் கப்பல்களுக்கு நோக்கி இயங்கியது.
சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள இக்கப்பல், சீனக் கடல் காவற்துறையின் கப்பலின் பயணப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸின் கப்பல், முன்முயற்சியுடன் ஆபத்தான முறையில், சீன கடல் காவற்துறையின் கப்பலை நோக்கிப் பயணிப்பது, தென் சீன கடல் மீது பிலிப்பைன்ஸ் அரசின் அசட்டுத்துணிச்சல் கொள்கையை அம்பலப்படுத்தியது.
தென் சீன கடல் அமைதியை படிபடியாக நனவாக்க வேண்டும் என்பதை வரலாற்றின் அனுபவங்கள் காட்டியுள்ளன. சர்ச்சை மற்றும் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவது முதல், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை நோக்கி முன்னேறலாம். இறுதியில் சர்ச்சைகளை முற்றிலும் தீர்க்க வேண்டும்.
அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் மேலும் நெருங்கிய உறவை நிறுவி, மேலதிக ஆதரவை பெறுவது, தென் சீன கடல் பரப்பில், பிலிப்பைன்ஸ் மோதலை வேண்டுமென்றே ஏற்படுத்துவதற்குக் காரணம் இருக்கலாம். இது, இப்பிரதேசத்தின் அமைதிக்குக் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.