இந்திய கடற்படை தலைமை தளபதி பொறுப்பில் இருந்து அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வுபெற்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு அழைத்தபோதெல்லாம் கடற்படை தன் கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளது என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு ஒத்துழைப்பு நல்கிய சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், புதிய தளபதியாகப் பொறுப்பேற்ற அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் கடற்படையை அடுத்தகட்ட உயரத்திற்கு எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பொறுப்புகளை ஒப்படைப்பதாக கூறினார்.
