திருவள்ளுவரை வெள்ளை உடையில் திமுக மாற்றியது தான் தவறு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேசிப் பேசியே வீணாய் போன இயக்கம் திமுக என சாடினார்.
திருவள்ளுவரை வெள்ளை உடையில் திமுக மாற்றியது தான் தவறு என்றும், சனாதன வாழ்க்கை முறையை பின்பற்றியவர் திருவள்ளுவர் என்றும் அவர் கூறினார்
வேற்றுமை பேசியதால்தான் திமுக-வை மக்கள் நிராகரித்தார்கள் என்றும், தவெக திமுக வழியில் பயணம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்
ஆள்வதற்கு மக்கள் வாய்ப்பளித்தும் ஆள்பிடிக்கும் வேலையை தவெக செய்வதாகவும், தமிழகத்தை பாதுகாப்பதில் தவெகமுழு கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
