சட்டத்தின் ஆட்சி தொடர்பான ஷிச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்டப் படைப்புகளின் 1ஆவது தொகுதி என்ற ஆங்கிலப் புத்தகம், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வெளியிடப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியைச் சேர்ந்த கட்சி வரலாற்று மற்றும் ஆவண ஆராய்ச்சி அலுவலகம் இப்புத்தகத்தின் முதல் தொகுதியை வெளியிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் முதல் 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்கள் வரையான காலக்கட்டத்தில், சட்டத்தின் ஆட்சிக் கட்டுமானம் பற்றிய ஷிச்சின்பிங்கின் முக்கிய படைப்புகள் இதில் சேர்க்கப்பட்டன.
ஷிச்சின்பிங்கின் சட்டத்தின் ஆட்சி சிந்தனையின் முக்கிய அம்சங்கள், புதிய யுகத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த சீன சோஷலிச சட்டக் கட்டுமானத்தில் வரலாற்று சீர்திருத்தம் மற்றும் சாதனைகள், உலகின் சட்டத்தின் ஆட்சி நாகரிக கட்டுமானத்திற்கான சீனாவின் அறிவுத்திறமை மற்றும் சீனாவின் நடைமுறையாக்கத்தின் முக்கிய பங்கு உள்ளிட்டவை குறித்து, வெளிநாட்டு ரசிகர்கள் மேலும் அறிந்துகொள்வதற்கு இப்புத்தகத்தின் ஆங்கில தொகுதி வெளியிடப்படுவது துணை புரியும்.
