சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் சாவ் லேஜீ மே 27 முதல் 30ஆம் நாள் வரை ரஷியாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ரஷியாவின் கூட்டாட்சிக் கவுன்சில் தலைவர் மத்வியென்கோ அம்மையார், ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவை தலைவர் வோலோடின் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புக்களில் சாவ் லேஜீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின்னின் நெடுநோக்கு வழிக்காட்டலுடன், புதிய யுகத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு உயர்நிலையில் வளர்ந்து வருகிறது என்றார். மேலும், ரஷியாவுடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துக்களைச் செயல்படுத்தி, ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை அதிகரித்து, பரஸ்பர ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
மத்வியென்கோ அம்மையார் கூறுகையில், சீன தேசிய மக்கள் பேரவையுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், முதலீட்டு, மானிடப் பண்பாட்டியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளுக்குச் சட்ட உத்தரவாதத்தை வழங்க, ரஷியாவின் கூட்டாட்சி கவுன்சில் விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், சீன-ரஷிய நாடாளுமன்ற ஒத்துழைப்புக் கமிட்டியின் 11வது கூட்டத்தில் சா லேஜீ 28ஆம் நாள் பங்கேற்றார்.
