சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் யுன்னா மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், மேற்குப் பகுதி வளர்ச்சித் திட்டம் மற்றும் யாங்சி ஆற்று பொருளாதார மண்டல வளர்ச்சித் திட்டம் பற்றிய கட்சி மத்திய கமிட்டியின் நெடுநோக்குப் பணிகளை யுன்னான் செவ்வனே செயல்படுத்தி, புதிய வளர்ச்சிக் கருத்துகளைச் சரியாகவும் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தி, உயர்தர வளர்ச்சியை முயற்சியுடன் முன்னேற்ற வேண்டும் என்றும், சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை மேற்கொண்டு, முழு முயற்சியுடன் முன்னேறி, சீன நவீனமயமாக்கப் போக்கில், யுன்னான் வளர்ச்சியின் புதிய நிலைமையைத் துவக்கி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.