அமெரிக்காவின் புதிய அரசு பல நாடுகள் மீது கூடுதல் சுங்க வரி வசூரிப்பதாக அறிவித்துள்ளது. பொருளாதார மற்றும் வர்த்தக துறையில் “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” என்ற கொள்கை, சர்வதேச சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நடத்திய உலகளாவிய கருத்து கணிப்பின்படி, பிற நாடுகள் மீது அமெரிக்கா ஒரு தரப்பாக கூடுதல் சுங்க வரி வசூரிப்பது, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது. இதற்கு மாறாக, மீட்சியடைந்து வருகின்ற உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
அமெரிக்க அரசு மேற்கொண்ட வர்த்தகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளைக் கடுமையாக மீறியுள்ளன என்று இந்தக் கருத்து கணிப்பில் பங்கேற்ற 90.53 விழுக்காட்டினர் தெரிவித்தனர். பிற நாடுகள் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் பொருளாதார நிர்ப்பந்த நடவடிக்கை, உலகச் சந்தையின் நிலைத்தன்மையைக் சீர்குலைத்து, உலகப் பொருளாதார மீட்சியை நீண்டகாலமாகப் பாதித்துள்ளது என்று 92.14 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
மேலும், அமெரிக்காவின் புதிய அரசு மேற்கொண்ட தூதாண்மை கொள்கையின் காரணமாக, சர்வதேச சமூகத்தில் தனது தலைமை தகுநிலையை வலுவிழந்து வருகிறது என்று 65 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். உலகளவில் 38 நாடுகளைச் சேர்ந்த 14071 பேர் இந்தக் கருத்து கணிப்பில் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது.