2ஆவது உலக செவ்வியல் மாநாடு கிரேக்கத்தில் துவக்கம்

2ஆவது உலக செவ்வியல் மாநாட்டுக்கான செய்தியாளர் கூட்டம் ஜூன் முதல் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. பண்டை கால ஞானங்களின் தற்கால வெளிப்பாடு என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இம்மாநாடு ஜூன் 9,10ஆம் நாட்களில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் துவங்கவுள்ளது. சீன சமூக அறிவியல் கழகம், சீனக் கல்வித் துறை அமைச்சகம், சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம், கிரேக்க பண்பாடு அமைச்சகம், கிரேக்கத்தின் ஏதென்ஸ் அறிவியல் கழகம் ஆகியவை இம்மாநாட்டைக் கூட்டாக நடத்தவுள்ளன.

சீனா மற்றும வெளிநாட்டு செவ்வியல் ஆய்வு அறிஞர்கள், பண்பாடு, தொல்லியல் உள்ளிட்ட துறைகளின் நிபுணர்கள் இதில் பங்கேற்று செவ்வியல் மற்றும் நாகரீகம் தொடர்பான நிகழ்ச்சி நிரல்களில் உரையாடி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர்.

Please follow and like us:

You May Also Like

More From Author