சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 15ஆம் நாள் அரசு முறை பயணமாக மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றார்.
கோலாலம்பூல் சர்வதேச விமான நிலையத்தில் ஷி ச்சின்பிங் எழுத்து மூல உரை நிகழ்த்தினார். அவர் அப்போது கூறுகையில், நட்பார்ந்த அண்டை நாடுகளான சீனாவும் மலேசியாவும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றி பெற்று, நாடுகளுக்கிடையிலான உறவின் முன்மாதிரியை உருவாக்கியுள்ளன. முக்கிய வளரும் நாடுகள் மற்றும் உலக தென் பகுதியிலுள்ள முக்கிய நாடுகளாக, சீனாவும் மலேசியாவும் உயர்நிலை நெடுநோக்கு ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது, இரு நாடுகளின் பொது நலன்களுக்குப் பொருத்தமானதாகும் என்றார்.
மேலும், இப்பயணத்தை வாய்ப்பாக கொண்டு, இரு நாடுகளின் பாரம்பரிய நட்புறவை மேலும் ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, நவீனமயமாக்க கட்டுமானத்துக்கான ஒத்துழைப்புகளை முன்னேற்றி, பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை புதிய நிலைக்கு முன்னேற்ற விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.