பத்திர பதிவில் புதிய புரட்சி! இனி வீட்டிலிருந்தே நிலம், வீடுகளைப் பதிவு செய்யலாம்!

Estimated read time 1 min read

தமிழகப் பதிவுத்துறையில் நிலம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களின் வசதிக்காக, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே எங்கிருந்தும் ஆவணப் பதிவு செய்யும் “வருகை இல்லா ஆவணப் பதிவு” (Anywhere Registration) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய இணையவழி ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் எந்த நேரத்திலும் தங்களின் ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்துப் பதிவு செய்து கொள்ள முடியும்.
முதற்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகள், மனை விற்பனை மற்றும் வங்கிக் கடன் ஆவணங்கள் போன்ற குறிப்பிட்ட ஆவணங்களுக்கு இந்த ஆன்லைன் பத்திர பதிவு நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author