2025-2026 கல்வியாண்டுக்கான தமிழக பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை (மெரிட்) பட்டியல் இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “தரவரிசை பட்டியல் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 2.41 லட்சம் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தரவரிசை எண்ணை [www.tneaonline.org] (http://www.tneaonline.org) என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்,” எனத் தெரிவித்தார்.
தமிழக பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு
