ஷென்சோ-21 குழுவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களான சாங்லூ, வூஃப், சாங்கோங்சாங் ஆகியோர் ஏப்ரல் 17ஆம் நாள், 5.5 மணிக்கு விணகலத்தை விட்டு வெற்றிகரமாக வெளியேறி நெருக்கமாக ஒத்துழைத்து தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்.
தற்போது வரை வீரர் சாங்லூ மொத்தமாக 7 முறை விண்கலத்தை விட்டு வெளியே சென்று கடமையை நிறைவேற்றியுள்ளதோடு, விண்கலத்தில் இருந்து அதிகம் வெளியேறிய விண்வெளி வீரர் என்னும் சீனாவின் வரலாற்றுப் பதிவையும் படைத்துள்ளார்.
