அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (குவாட்) தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தரக்கூடும், என இந்தியாவிற்கான தூதர் வேட்பாளர் செர்ஜியோ கோர், செனட் உறுதிப்படுத்தல் விசாரணையில் சூசகமாக தெரிவித்தார்.
டிரம்பின் நெருங்கிய உதவியாளரான கோர், செனட் வெளியுறவுக் குழுவிடம், “குவாட் தலைவர்களைச் சந்திப்பதில் ஜனாதிபதி முழுமையாக உறுதிபூண்டுள்ளார்” என்று கூறினார்.
அடுத்த குவாட் கூட்டத்திற்கான பயணம் குறித்து ஏற்கனவே விவாதங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
QUAD உச்சிமாநாட்டிற்காக டிரம்ப் இந்தியா வரக்கூடும்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்
