சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஆகஸ்ட் 7ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 திங்களில், சீனாவின் சரக்கு வர்த்தகத் துறை, சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தியுள்ளது. மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, 25.7 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா ஆகியவற்றுக்கான ஏற்றுமதி இறக்குமதி தொகை, முறையே 9.4, 3.9, 17.2 மற்றும் 16.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதல் 7 திங்களில், உயர் தொழில் நுட்பப் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி தொகை, 5.1 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 8.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதியில் இது 45.4 விழுக்காட்டுப் பங்கு வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம்:VCG