ஆவின் பச்சை நிற பால் விநியோகம் நிறுத்தம் என்ற செய்தி உண்மையா?

Estimated read time 1 min read

ஆவின் “Green Magic” பாலின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது அதன் அளவு கணிசமாக குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

ஆவின் நிறுவனம் தனது “Green Magic” பால் உட்பட அனைத்து வகையான பால்களையும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து வழக்கம்போல் தங்குதடையின்றி விநியோகம் செய்து வருகிறது. எந்தவொரு பாலின் விநியோகமும் குறைக்கப்படவோ அல்லது நிறுத்தப்படவோ இல்லை என்றும், நுகர்வோர்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் ஊடகங்களில் பரவும் இத்தகைய தவறான வதந்திகளை நம்பி தேவையற்ற குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆவின் கிரீன் மேஜிக் பால் எவ்வித தடங்கலும் இன்றி வழக்கம்போல் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என அந்த செய்தி வெளியீட்டில் மிகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author