ரங்கராஜ் பாண்டேவின் காரசாரமான பதில்….!! 

Estimated read time 0 min read

முதலமைச்சர் விஜய் பிரஸ் மீட் கொடுக்கவில்லை என்றாலும், அவரைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களாவது கொடுக்க வேண்டாமா?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே செய்தியாளரையே வெளுத்து வாங்கும் தொனியில் அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார்.

“நீங்க கண்ணை மூடிட்டு இருக்கீங்களான்னு தெரியல, இல்ல விவரம் இல்லாம நிறைய சினிமா பார்க்குறீங்கன்னு நினைக்கிறேன்!” என்று காரசாரமாகத் தொடங்கிய பாண்டே, தவெக தரப்பில் அமைச்சர்கள் பேட்டியே கொடுப்பதில்லை என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களின் வாயை அடைக்கும் விதமாகத் தவெக அமைச்சர்களின் நீண்டதொரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அவ்வகையில் தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், அருண்ராஜ் ஐஏஎஸ், ரமேஷ், வினோத் மற்றும் செங்கோட்டையன் அண்ணன் எனப் பல அமைச்சர்கள் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி கொடுத்து வருவதாகப் பாண்டே சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்ட அவர், “இவங்க எல்லாரும் உட்கார்ந்து 24 மணி நேரமும் பேட்டி மட்டுமே கொடுத்துட்டு இருந்தா அப்புறம் கவர்மெண்ட் வேலையை செய்றது யார்?” என நெத்தியடியாகக் கேள்வி கேட்டுச் செய்தியாளரின் வாயை அடைத்துள்ளார். பாண்டேவின் இந்த அதிரடி பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர தீயாய் பரவி வருகிறது.

You May Also Like

More From Author