டிசம்பர் 29ஆம் நாள் முதல், சீன மக்கள் விடுதலை படையைச் சேர்ந்த கிழக்குப் போர் மண்டலப் பிரிவு, தரை, கடல், வான், ஏவுகணை உள்ளிட்ட படைபிரிவினர்களை ஒருங்கிணைத்து, தைவான் நீரிணை, தைவான் தீவின் வடக்கு, தென் மேற்கு, தென் கிழக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் 2025 நீதி கடமை என்ற இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கியது. கிழக்குப் போர் மண்டலப் பிரிவின் செய்தித்தொடர்பாளரும் தரைப்படை மூத்த கர்னல் ஷ்யி இத்தகவலைத் தெரிவித்தார். கடல் மற்றும் வான் வழியில் கண்காணிப்பை மேற்கொண்டு, முக்கிய துறைமுகங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகள் மீது முற்றுகை மற்றும் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவது முதலிய கடமைகள் இதில் அடக்கம். பல்வேறு பிரிவுகளின் போர் ஒத்திகை கலந்துகொள்ளும் ஆற்றலைச் சோதனை செய்வது இப்பயிற்சியின் நோக்கமாகும். தைவான் சுதந்திரத்தின் பிரிவினை சக்தி மற்றும் வெளிபுற தலையீட்டுச் சக்தி மீது கடும் எச்சரிக்கையாகவும் இப்பயிற்சி விளங்குகிறது.
