பிரதமர் மோடி வருகையொட்டி, மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவு நாள் வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். அங்கு, டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார்.
டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ‘டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஃபார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ. என்ற தலைப்பில் சிறு, குறு, தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரையில் இரண்டு நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மதுரை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் இயங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடி வருகையையொட்டி, பாதுகாப்பு பணியில் சுமார் 6,000 முதல் 10,000 போலீசார் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.