வங்காளத்தேசத் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள வங்காளத்தேசத் தலைமையமைச்சர் தாரிக் ரஹ்மானுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூன் 26ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பின் போது, புதிய யுகத்தில் சீன-வங்காளத்தேச பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கி, இரு நாட்டுறவின் உயர்நிலை வளர்ச்சியை மேலும் முன்னேற்றவுள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், அண்டை நாடுகளுடனான சுமுகமான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான கொள்கையிலும், நட்பு, நேர்மை, பரஸ்பர நன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகிய கோட்பாடுகளிலும் சீனா ஊன்றி நின்று, சீனாவின் புதிய வளர்ச்சியுடன் சுற்றுப்புற நாடுகளுக்குப் புதிய வாய்ப்புகள் மற்றும் இயக்காற்றலை வழங்கி வருகிறது என்றார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவுக்கு தாரிக் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், மாபெரும் நாடான சீனா, வங்காளத்தேசத்தின் தூதாண்மை உறவில் முக்கிய இடத்தை வகிப்பதாகக் குறிப்பிட்டதோடு, வங்காளத்தேசத்தின் மதிப்பிற்குரிய மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகும் என்றும் கூறினார்.

You May Also Like

More From Author