தங்கலான் சக்ஸஸ் பார்ட்டி: படக்குழுவினருக்கு விருந்து வைத்த சீயான் விக்ரம்  

நடிகர் ‘சீயான்’ விக்ரம் தனது சமீபத்திய வெளியீடான ‘தங்கலான்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆடம்பரமான விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விருந்தில் படக்குழுவினர் அனைவருக்கும் அவரே உணவு பரிமாறும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான தங்கலான் திரைப்படம் விமர்சன ரீதியாக விக்ரமின் நடிப்பிற்காக புகழப்பட்டது.
படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன நிலையில் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.
இந்த விருந்து நிகழ்வில், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தில், பசுபதி, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author