3 நாள் அரச முறை பயணமாக பிரதமர் மோடி இன்று செஷல்ஸ் தீவுக்கு செல்கிறார்.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ். அந்நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று செஷல்ஸ் செல்கிறார்.
மேலும், இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு படைப் பிரிவினர் செஷல்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில்கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி தனது பயணத்தின்போது செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
