சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யாதொங் நவம்பர் 12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீனா-அமெரிக்கா இடையிலான 30 பில்லியனுக்கு 30 பில்லியன் என்ற பரஸ்பர சுங்கவரி குறைப்பு கட்டமைப்பு என்பது, இரு தரப்பு வர்த்தகத்தை நிதானப்படுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் துணைப் புரியும். இரு நாடுகளின் தொழில் மற்றும் வணிகத் துறை இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளன என்றார். மேலும், அமெரிக்கா, சீனாவுடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, இக்கட்டமைப்பின் நடைமுறையாக்கத்தை முன்னேற்றி, இரு நாட்டு வேளாண் பொருட்களின் வர்த்தகத்துக்கு மேலதிக சாதகமான நிபந்தனைகளை உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு குறித்து அவர் கூறுகையில், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் தத்தமது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
