சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம், உயிரினச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவை அண்மையில், சீனாவின் மீன்வள உயிரினச் சுற்றுச்சூழல் நிலைமை பற்றிய கூட்டறிக்கையை(2024)வெளியிட்டன. 2024ம் ஆண்டில் மீன்வள உயிரினச் சுற்றுச்சூழல் நிலைமை நிலையாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிலைமை தொடர்ச்சியாக மேம்பட்டு வந்துள்ளது.
2024ம் ஆண்டில் சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகத்தின் ஏற்பாட்டில், நாடளவில் 42 கண்காணிப்பு நிலையங்கள், 1 கோடியே 1.6 இலட்சம் ஹெக்டர் பரப்பளவுள்ள 159 மீன்வள பகுதிகளின் மீது கண்காணிப்பு மேற்கொண்டன. 2020ம் ஆண்டின் நிலைமையை விட, கடல் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் கனிம நைட்ரஜன், பாஸ்பேட், பாஸ்பரஸ் முதலியவை அனுமதிக்கப்பட்ட வரம்பு மீறிய அளவு குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த கட்டத்தில், மீன்வள உயிரினச் சுற்றுச்சூழல் தரத்தை மதிப்பிடும் வழிமுறையை வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் முழுமைப்படுத்தி, கண்காணிப்பு அளவை விரிவாக்கி, இத்துறையின் உயர் தர வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரத்தை வழங்கும்.
படம்:VCG
