தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’, நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த ஜூலை மாதமே திரைக்கு வரவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த சென்சார் சிக்கல்கள் இந்த வாரம் முடிவுக்கு வந்து, படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே திரையரங்குகளில் வெளியாக வேண்டியிருந்தது.
ஆனால், படத்தில் உள்ள சில அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, தணிக்க வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் படத்தின் HD பிரிண்ட் ஆன்லைனில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலையில் ரிலீஸ்?
