எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி-சாகசத் திரைப்படமான ‘வாரணாசி’யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பிரியங்கா சோப்ராவின் மந்தாகினி கதாபாத்திரம் மீதான ஃபர்ஸ்ட் லுக், இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
50,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்த ஹைதராபாத், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற பிரம்மாண்டமான நேரலை வெளியீட்டிற்குப் பிறகு, டீஸர் வெளியிடப்பட்டது.
இந்த டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வு, இந்தியாவில் திரைப்பட அறிமுகங்களுக்கான புதிய தரத்தை நிர்ணயித்தது.
டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் 130 அடி x 100 அடி திரையில் காண்பிக்கப்பட்டன.
50,000 ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட வாரணாசி திரைப்பட டீஸர்
