இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு பிஎம் வித்யாலக்ஷ்மி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் எந்தவொரு சொத்துப் பிணையோ அல்லது உத்தரவாததாரரோ இன்றி 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் பெற முடியும்.
தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து வழங்குகின்றன.
பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டம்: பிணை இல்லாமல் 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவது எப்படி?
