நேபாளத்தில் ஒரு சீன நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டு இயக்கப்படும் மேல் மார்ஸ்யாங்டி நீர்மின் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 300 கோடி கிலோவாட்-மணிநேர (kWh) மின் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு நிலையான சுத்தமான ஆற்றலை வழங்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
மேற்கு நேபாளத்தில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் அமைந்துள்ள நதியில் 50 மெகாவாட் திறனுடன் நிறுவப்பட்ட மின் நிலையம், ஜனவரி 2013 இல் கட்டுமானத்தைத் தொடங்கி ஜனவரி 2017 இல் வணிக ரீதியாக செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு 2024ஆம் ஆண்டில், 37.4 கோடி கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது அதன் வருடாந்திர மின் உற்பத்தித் திட்டத்தில் 107 சதவீதத்தை நிறைவேற்றியது. தேசிய மின்கட்டமைப்போடு இணைக்கப்பட்ட அதன் மின் உற்பத்தி 37.2 கோடி கிலோவாட் மணிநேரத்தை எட்டியது. இது அதன் வருடாந்திர ஒப்பந்த உற்பத்தியில் 117.1 சதவீதத்தை நிறைவேற்றியது.
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு மற்றும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான போகாரா உள்ளிட்ட பகுதிகளுக்கு இது மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதிகளில் ஏற்படும் மின் பற்றாக்குறை நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.