போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஹாய்நான் பற்றிய கிளை கருத்தரங்கு

Estimated read time 0 min read

போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஹாய்நான் பற்றிய கிளை கருத்தரங்கு மற்றும் “நமது பகிரப்பட்ட தாயகம்” என்ற தலைப்பிலான வட்ட மேசைக் கூட்டம் மார்ச் 27,28 ஆகிய நாட்களில் ஹாய்நான் மாநிலத்தில் நடைபெற்றது.

சீனா, பிரிட்டன், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10க்கும் மேலான சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் நேரடியாகவும் இணைய வழியாகவும் இந்த வட்ட மேசைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கடல் நிர்வாகத்தை முன்னேற்றுதல், கடல் பாதுகாப்பைப் பேணிக்காத்தல், நீல நிற பொருளாதாரத்தை வளர்த்தல் உள்ளிட்ட துறைகள் குறித்து அவர்கள் விவாதித்ததோடு, மனித குலத்தின் பொது தாயகம் எதிர்கொள்கின்ற சவால்கள், சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் எதிர்காலத் திசைகளையும் ஆய்வு செய்தனர்.

அவர்கள் கூறுகையில், உலகளவில் புவியமைவு அரசியல் மோதல்கள் தீவிரமாகி வருகின்றன. இது கடல் பாதுகாப்பு மற்றும் கடல் நிர்வாகத்தைப் பாதித்துள்ளது. பிரதேச கடல் நிலைத்தன்மை மற்றும் சர்வதேச கடல் ஒழுங்கு, புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. இந்நிலையில், கடல் சார் பொது எதிர்காலச் சமூகம் என்ற கருத்து, இக்காலத்திலுள்ள மதிப்பு மற்றும் நடைமுறை முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தனர்.

போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஹாய்நான் பற்றிய கிளை கருத்தரங்கு மற்றும் “நமது பகிரப்பட்ட தாயகம்” என்ற தலைப்பிலான வட்ட மேசைக் கூட்டம் உள்ளிட்ட ஊடக நிகழ்வுகளில், 20க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 200 நிபுணர்கள் மற்றும் அறிஞர்களும், தொழில் பிரதிநிதிகளும், மாற்றங்கள் நிறைந்த உலகத்திலுள்ள கடல் ஒழுங்கு பற்றி விவாதித்து, கடல் சார் ஒத்துழைப்பு மற்றும் நிர்வாகத்தை முன்னேற்றுவதற்குப் பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author