நிறைவடையவுள்ள 2024ஆம் ஆண்டில், உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் குறைந்து வருகிறது. சர்வதேச புவிசார் அரசியல் சூழ்நிலையின் உறுதியற்ற தன்மை தீவிரமாகியுள்ளது. பதற்ற நிலையில், சீனாவில் நடைபெற்ற மத்தியப் பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள், மக்களுக்கு நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையைக் கொண்டு வந்துள்ளன. 2025ஆம் ஆண்டு சீனா மேலும் ஆக்கப்பூர்வ மனப்பான்மையுடன் பொருளாதார அறைகூவல்களைச் சமாளித்து, பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்தி, சீனப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச சந்தைக்கு ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கருதின.
2024ஆம் ஆண்டு சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகள் விரைவில் தங்குதடையின்றி நனவாக்கப்படவுள்ளன. இவ்வாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் திங்கள் வரை, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம், உலகின் முக்கிய நாடுகளிடையே முன்னணியில் உள்ளது. இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை, வரலாற்றின் இதே காலத்தில் இருந்ததை விட மிக அதிகம். புதிய தர உற்பத்தி ஆற்றலின் வளர்ச்சி, உலகின் முன்னணியில் இருக்கின்றது. சீனப் பொருளாதாரம் நீண்டகாலமாக சீராகி வரும் அதன் அடிப்படை போக்கு மாறாது. உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான மிக முக்கிய இயக்காற்றலாக சீனா இன்னும் திகழ்கிறது என்பதை இவை காட்டுகின்றன.
அடுத்த ஆண்டிற்கான முக்கிய பணிகளில், நுகர்வை பெரிதும் ஊக்குவிப்பது, முதலீட்டு பயனை அதிகரிப்பது, உள்நாட்டு தேவையை பன்முகங்களிலும் விரிவாக்குவது ஆகியவை முதன்மை இடத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இது வெளிப்புறத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனா நுகர்வை பெரிதும் ஊக்குவிப்பது பற்றிய திட்டம் “நல்ல அறிகுறி” ஆகும். இது சந்தை நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நெதர்லாந்து சர்வதேச குழுவின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு பிளஸ் என்ற செயல் மேற்கொள்வது, எதிர்கால தொழில்களை வளர்ப்பது, எண்ணியல் பொருளாதாரத்தை ஆக்கமுடன் பயன்படுத்துவது, பசுமை தொழில் நுட்பத்தின் மூலம் பாரம்பரிய தொழில்களை மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள், சீனப் பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சியை முன்னேற்றும். அவை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும்.
திறப்பானது, சீனப் பொருளாதாரத்தின் தெளிவான சிறப்பாகும். 2024ஆம் ஆண்டு, தயாரிப்புத் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் கட்டுப்பாட்டை சீனா பன்முகங்களிலும் நீக்கியது. சீனாவில் மிக அதிகமான செல்வம் வளர்க்கப்படக்கூடும். பெரிய பரந்துபட்ட சீன சந்தையை அலட்சியம் செய்யக் கூடாது என்று ஜெர்மனியின் Zeiss குழுமத்தின் சீன நாட்டு கிளையின் தலைமை இயக்குநர் ஃபோஸ்ட் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.