சீனத் தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமையக அலுவலகம், தேசிய சீற்றத் தடுப்பு மற்றும் நிவாரண ஆணைய அலுவலகம், முன்னெச்சரிக்கை நிர்வாக அமைச்சகம் ஆகியவை 7ஆம் நாள் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்துக்கு சுமார் 76 ஆயிரம் வெள்ளத்தடுப்புப் பொருட்களை அனுப்பியுள்ளன.
அதற்கு முன்பு வழங்கப்பட்ட 1.6 இலட்சம் நடுவண் அரசின் சீற்றத் தடுப்புப் பொருட்கள் குவாங்சியைச் சென்றடைந்துள்ளன.
சீனத் தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமையக அலுவலகம், முன்னெச்சரிக்கை நிர்வாக அமைச்சகம் ஆகியவை அன்று, குவாங்சி, ஹுபெய், கான்சு முதலிய இடங்களில் வெள்ளத்தடுப்புப் பணியை பரவல் செய்துள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள குவாங்சியிலுள்ள சில இடங்களில் மக்களைத் தேடிக் கண்டுபிடித்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து, நீர் தேக்க அபாய நிலையைக் கையாளும் பணியில், உள்ளூர் அரசுகளுக்கு தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமை இணைப்புப் பணிக் குழு வழிக்காட்டல் செய்துள்ளது.
தற்போது குவாங்சியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புதவிப் பணியில் 137 பேர் மீட்கப்பட்டு, 1058 பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயரப்பட்டுள்ளனர்.
