ஐதராபாத் அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது.
அடுத்ததாக ஆட தொடங்கிய மும்பை அணி 17 புள்ளி 2 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.