தமிழ்நாட்டில் இன்று முதல் மே 1-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏராளமான இடங்களில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் எனவும் இன்று முதல் வருகிற மே 1-ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.