செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச தரநிலை அமைப்புமுறையின் உருவாக்கத்தில் சீனா ஆழமாக ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தற்போதுவரை 29அடிப்படை மற்றும் பொதுவான சர்வதேச தர நிர்ணயங்களை உருவாக்குவதற்கு சீனா வழிநடத்தி வருகின்றது. சர்வதேச தர நிர்ணயம் தொடர்புடைய நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சீன நிபுணர்களின் எண்ணிக்கை சுமார் 400ஐ எட்டியுள்ளது என்று சந்தை ஒழுங்குமுறைக்கான சீனத் தேசிய நிர்வாகத்தின் பொறுப்பாளர் ஒருவர் 24ஆம் நாள் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு”1+N”எனும் சர்வதேச தரநிலை கட்டமைப்பை மேம்படுத்துவதில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, தரவுகள் ஆட்சிமுறை, மனித-கணினி தொடர்பு, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்ட முக்கியப் துறைகளில் கவனம் செலுத்தி, 29 அடிப்படையான மற்றும் பொதுவான சர்வதேசத் தரநிலைகளின் உருவாக்கத்திற்கு வழிநடத்தி வருகின்றது. அதேவேளையில், பொலிவுறு நகர வளர்ச்சி, அறிவார்ந்த உற்பத்தி முதலிய முக்கியத் தொழில்துறைகளில் கவனம் செலுத்தி, தொழில்துறைப் பயன்பாடுகளுக்கான 49 சர்வதேசத் தரநிலைகளின் உருவாக்கத்தை வழிநடத்துவதற்காக சீனா 15 நிறுவனங்கள் ஒருங்கிணைத்துள்ளது என்று தெரிவித்தார்.
