ஷென்சோ-24 விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ள சீனா

ஷென்சோ-24 விண்கலத்தின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணம் குறித்த செய்தியாளர் கூட்டம், 24ஆம் நாள் முற்பகல் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் நடைபெற்றது.

ஷென்சோ-24 என்ற மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம், பெய்ஜிங் நேரப்படி நவம்பர் 25ஆம் நாள் காலை 08:18 மணிக்கு ஏவப்படவுள்ளது என்றும், டாங் ஹோங்போ, வூ யீ, பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷான் அலி ஆகியோர் இடம்பெற்ற விண்வெளிப் பயணக் குழுவில், டாங் ஹோங்போ பயணக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என்றும், செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த மூன்று விண்வெளி வீரர்கள் முறையே விண்கல ஓட்டுநர், விண்வெளிப் பயணப் பொறியாளர், பேலோடு நிபுணர் ஆவர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷான் அலி, டியான்கோங் விண்வெளி நிலையத்தை அடையும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் ஆவார். தற்போது இப்பயணத்திற்கான அனைத்து ஆயத்தப்பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author