முதல் 10 மாதங்களில் சீனாவின் மின் நுகர்வு அதிகரிப்பு

இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் சீனாவின் மின் நுகர்வு குறித்த தரவுகளை சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் 23ஆம் நாள் வெளியிட்டது. இதன்படி, இக்காலத்தில் சீனாவின் மின் நுகர்வு முந்தைய ஆண்டின் இதேகாலத்தை விட 3.7 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, நாட்டின் பொருளாதாரத்தின் சீரான செயல்பாட்டையும், புதிய இயக்காற்றல் வலுவடைந்து வருவதையும் இது காட்டுகிறது. இதில், நாட்டின் இணையம் உள்ளிட்ட தரவுச் சேவைகள் தொழில்களில் மின் நுகர்வு 40க்கும் மேற்பட்ட சதவீத வளர்ச்சி விகிதத்துடன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரம் மின் நுகர்வின் அதிகரிப்புக்கு ஒரு புதிய உந்து விசையாக மாறியுள்ளது.

மேலும், உயர் தொழில்நுட்பம் மற்றும் உபகரண உற்பத்தி தொழில்களில் மின் நுகர்வு விரைவாக அதிகரித்துள்ளதோடு, உற்பத்தி தொழில் புதிய மற்றும் புத்தாக்க வளர்ச்சியை நோக்கி வளர்ந்து வருகின்றது என்றும் இந்த தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author