தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக வாக்குப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நிலையில், கடைசியாக 2019இல் 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அந்த சமயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் வார்டு வரையறை முடிந்த பின், 2021இல் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது.