தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநருமான இரா.செழியன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கு வயது 56.
இவரது மறைவுச் செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் மறைந்த இயக்குநரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட செழியன், கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியன் உடல்நலக் குறைவால் காலமானார்
