சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜனவரி 15ஆம் நாள் ஈரான் வெளியுறவு அமைச்சர் அலாகேஜுடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வாங் யீ கூறுகையில்,
ஐ.நா சாசனத்தையும் சர்வதேச சட்டத்தையும் பின்பற்ற வேண்டும் என்பதை சீனா வலியுறுத்தி வருகின்றது. சர்வதேச உறவில் வன்முறையைப் பயன்படுத்துவதையும் ஆயுத அச்சுறுத்தலையும் சீனா எதிர்த்து வருகின்றது.
ஈரான் அரசும் மக்களும் ஒன்றிணைந்து, சிக்கல்களைச் சமாளித்து, நாட்டு நிதானத்தைக் கடைபிடித்து, இயல்பான நலன்களைப் பேணிக்காப்பார்கள் என்று சீனா நம்புகின்றது. பல்வேறு தரப்புகள் அமைதியைப் பேணி மதிப்பளித்து, பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்றார்.
