சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 11ஆம் நாள் முற்பகல் ரியாத் நகரில் செளதி அரேபியத் தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். செளதி அரேபிய முதலீட்டு அமைச்சர் உள்ளிட்ட அரசு, வணிக சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பத்துக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
லீ ச்சியாங் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளில், சீனாவும் செளதி அரேபியாவும் நிதானமான அரசியல் உறவை நிலைநிறுத்தி வருகின்றன. இரு தரப்புகளின் எதார்த்தமான ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு வலுவான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகின்றது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், செளதி அரேபியத் தொழில் நிறுவனங்கள் சீன சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, பெட்ரோலிய வேதியியல், அடிப்படை வசதி கட்டுமானம், வர்த்தகம் முதலிய பாரம்பரிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பை விரிவாக்கி, எண்ணியல் பொருளாதாரம், பசுமையான பொருளாதாரம் முதலிய புதிதாக வளர்ந்து வரும் தொழில்களிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
சீனாவின் வளர்ச்சி எதிர்காலம் குறித்து பேரார்வம் காட்டி, சீனாவில் தமது வளர்ச்சியின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், சீனாவில் தொடர்ந்து முதலீடு செய்து, புதிய எரியாற்றல், நாணயம், எண்ணியல் பொருளாதாரம் முதலிய துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்றும் செளதி அரேபிய தொழில் மற்றும் வணிகத் துறையினர்கள் தெரிவித்தனர்.