இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தானுடன் ஒப்பிடக் கூடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தெளிவான விதிமுறைகளின்படி செயல்படுவதாகவும் கூறினார்.
எந்த நடவடிக்கை எடுத்தாலும், நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளிப்படுத்துவோம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
